Tuesday, February 7, 2012

திருப்பதி ரதசப்தமி

நான் கடந்த 3  வருடங்களாக ரதசப்தமியின் போது திருப்பதி சென்று வருகிறேன் (அப்போது ஒரே நாளில் பல வாகனங்களில் பெருமாள் வரும் விழா) திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் பெயர் பதி இருப்பதால்) ரூம் அலாட்மெண்ட்  ஆரம்ப தேதியை அவ்வொப்போது கவனித்து( சாதரணமாக 90 நாட்கள் முன்பாக, இன்பர்மேஷன் சென்டர்களில் 60 நாட்கள் முன்னர் மட்டுமே) நெட்டில்  புக் செய்துவிடுவேன். ரயிலுக்கும் 90  நாள் முன் புக்செய்துவிடுவேன்.தாங்களும் வருகிறோம் என்று கேட்ட உறவினர்களின் கம்பூயட்டர் பயன்பாடு அறிந்த மகன்களிடம் பதிவுக்கு ஏற்பாடு செய்யுமாறு அவ்வொப்பொது ஞாகபப்படுத்தி வந்தேன். காரணம் குளிர் காலம் என்பதால் நான் புக் செய்த ரூமில் அனைவரும்  தங்க இயலாது என்பதும், என் கார்டில் மேலும் பதிய முடியாது என்பதும் தான். ரயிலுக்கு மட்டும் புக் செய்து ரூமுக்கான முயற்சியில் பதிவு செய்ய முடிய வில்லை.மேலும் அவர்கள் திருமலைக்கு வரும் நேரம் நாங்கள் தரிசன கீயுவில் இருக்கும் காலம் என்பதால் சந்திக்க முடியாது , அலைய வேண்டாம் என்பதற்காக தேவஸ்தானத்தில் கொடுக்கும்  பூட்டான நவ்தால் 7 லீவர் புதியது  வாங்கி ஒரு சாவியை கவரில் போட்டு எந்த விபரமும் சொல்லாமல் கொண்டுவர ஏற்பாடுசெய்திருந்தேன். கீயுவுக்கு போகுமுன் ரூம் விபரம் சொல்லி பைகளை வைத்துவிட்டு அவர்களும் கீயுக்கு வந்தார்கள். திருப்பதி TV ல் 1 நாள் மட்டுமே  
  ரூம்,மேற்கொண்டு தங்கினால் 2/4 மடங்கு கட்டவேண்டும் என்ற அறிவிப்பினால் முதல் நாள் ஒரு பெயரிலும் அடுத்த நாள் வேறு பெயரிலும் நெட்டில் புக் செய்து இருந்தேன். முதல் நாள் கிடைத்த ரூம் மிகச்சிறியது.பொதுவசதி ஹீட்டரில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் சிறிய ஹீட்டர் கொண்டுபோய் இருந்தேன்.பழைய ரூம், 2பின் பிளக். மல்டிபிளக் வாங்கி கனக்ஷன் கொடுக்க மல்டிபிளக் மெல்ட் ஆனதால் வென்னீர் கிடைக்கவில்லை.  
2ம்நாள் ரூம் கிடைத்த இடத்தில் பொது ஹீட்டர் வசதி இருந்தது.இது விபரங்கள் அடுத்தமுறை திருமலைக்கு போக விரும்பும்போது ஒரு தகவலாக இதை பதிவு செய்துள்ளேன் 

Friday, June 17, 2011

Uppuma matter

அமெரிக்காவில் உப்புமா பரிசு வாங்கியது குறித்து : நேரு தமிழ்நாட்டில் உப்புமா பற்றி கேட்டபோது கேசரி - சுகர் + சால்ட் =  உப்புமா  என்று விளக்கம் கொடுத்தார் கலெக்டர் .